செப்டம்பர் 1 முதல் கோயில்களில் செல் கொண்டு செல்ல தடை

Estimated read time 0 min read

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோயில்களிலும் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்வதற்கான தடை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது.
கோயில்களின் அமைதியையும் ஆன்மீக சூழலையும் பேணிக் காக்கும் பொருட்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில் நிர்வாகங்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வமான சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author