நெல்லையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா!

Estimated read time 1 min read

நெல்லையில் ஆர்எஸ்எஸ் சார்பில் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆர்எஸ்எஸ் சார்பில் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. நெல்லை நகர கிளை சார்பில் நடைபெற்ற குருபூஜை விழாவுக்கு, ஷிவ் டிரேடர்ஸின் நிர்வாக இயக்குநர் துரை தலைமை தாங்கினார்.

S.K.M. குழுமத்தின் நிறுவனர் சிவக்குமார் சிறப்புரையாற்றிய நிலையில், தேசீய காயகாரி தலைவர் ஸ்ரீ ராம ராஜகோபால் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

குருபூஜை விழாவை, நகர கிளை நிர்வாகிகள் ஜெயசேகர், சுப்பிரமணியன் ஆகியோர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்த நிலையில், இந்த விழாவில் ஏராளமான சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You May Also Like

More From Author