தென்காசி புளியரையில் காட்டு யானை தாக்கியதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி!

Estimated read time 0 min read

தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில், காட்டு யானை மிதித்ததில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புளியரை பகுதியைச் சேர்ந்த சுப்பையா நெடுஞ்சாலைத்துறை ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வழக்கம்போல் விவசாய தோட்டத்திற்கு சென்றபோது, சுப்பையாவை காட்டுயானை தாக்கிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்களும், பொதுமக்களும் இப்பகுதியில் யானைகள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், பலமுறை புகார் அளித்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

சுப்பையா உடலை எடுத்துச் செல்ல விடாமல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author