“அண்ணா நூற்றாண்டு நூலில் திடீர் ரெய்டு….!”

Estimated read time 0 min read

சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கி வரும் புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (நவம்பர் 9) அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நூலகத்திற்குப் புதிய புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு மற்றும் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த ரைய்டு நடத்தப்பட்டு வருகிறது.

சோதனையின் போது நூலகக் கொள்முதல் தொடர்பான முக்கிய ஆவணங்கள், அதிகாரிகளின் கோப்புகள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாகச் சேகரித்து வருகின்றனர்.

முன்னதாக கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததிலும் இதேபோன்ற பிரம்மாண்ட ஊழல் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்த நிலையில், தற்போது விசாரணை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

எதிர்க்கட்சியான திமுக ஆட்சியின் போது நடைபெற்ற இந்த புத்தகக் கொள்முதல் முறைகேடுகள் குறித்து தவெக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை நடத்தி வருவதால், தொடர்புடைய திமுக புள்ளிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author