துபாய் மற்றும் அபுதாபியில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறும் ஆசிய கோப்பை 2025க்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
சல்மான் அலி ஆகா தலைமையிலான இந்த அணி, ஆசிய கோப்பையில் செப்டம்பர் 12ஆம் தேதி ஓமானுக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடும்.
அதைத் தொடர்ந்து செப்டம்பர் 14ஆம் தேதி இந்தியாவுடன் மோதும், செப்டம்பர் 17ஆம் தேதி குழு நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்கொள்ளும்.
இந்நிலையில், பாகிஸ்தானின் அணியில் முக்கிய வீரராக இருக்கும் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் அணியில் சேர்க்கப்படாததால் இந்த அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
எட்டு ஆண்டுகளில் பாபர் அசாம் ஆசிய கோப்பையை தவறவிடுவது இதுவே முதல் முறையாகும்.
ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமிற்கு கல்தா
