கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்..!

Estimated read time 0 min read

கேரளா மாநிலத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக திருவனந்தபுரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கொல்லம், பத்தனந்திட்டா,ஆலப்புழா மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதனால் திருவனந்தபுரம் மற்றும் பத்தனந்திட்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆறுகளின் நீர்மட்டம் உயரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேரளா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You May Also Like

More From Author