தூத்துக்குடி விண்வெளி மண்டலம் முதல் அறிவகம் வரை: தொழில் துறைக்கான பிரம்மாண்ட பட்ஜெட் ஒதுக்கீடு  

Estimated read time 1 min read

தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், மாநிலத்தின் தொழில் துறை மேம்பாட்டிற்காகவும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் ரூ.4,414 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய பல பிரம்மாண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் 2036-ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GSDP) 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு பொறுப்பேற்றது முதல் ரூ.35,062 கோடி மதிப்பிலான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதன் மூலம் 14,790 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஏற்றுமதியை மையமாக கொண்ட உற்பத்தியை ஊக்குவிக்கப் புதிய ‘தமிழ்நாடு தொழில் கொள்கை’ விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.

You May Also Like

More From Author