த்ரிஷா சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு காவல் நிலைய பிணை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  

Estimated read time 1 min read

முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இன்றே காவல் நிலையப் பிணை வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பான அவசர வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது தமிழ்நாடு AG ஆஜராகி விளக்கம் அளித்தார்.
“தஞ்சாவூர் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க காவல்துறை திட்டமிடவில்லை. அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், இன்றே காவல் நிலைய பிணையில் விடுதலை செய்யவே காவல்துறை முடிவு செய்துள்ளது” எனத்தெரிவித்தார்.

You May Also Like

More From Author