வியாழக்கிழமை (ஜூன் 12) அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் அருகே ஒரு துயரமான விமான விபத்து ஏற்பட்டது.
  அகமதாபாத்தில் இருந்து அப்போது லண்டனுக்கு கிளம்பிய போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஏர் இந்தியா விமானம் AI171 புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
  அந்த விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் பிரஜைகள், ஏழு போர்த்துகீசியர்கள் மற்றும் ஒரு கனடிய நாட்டவர் உட்பட 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
  விமானம் 174 நாட் வேகத்தில் 625 அடி உயரத்தை அடைந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, மருத்துவர்கள் விடுதிக்கு அருகில் உள்ள மேகனி நகர் பகுதிக்கு அருகில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கிய அகமதாபாத் விமானத்தில் முன்னாள் முதல்வரும் பயணம்?
 
                 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                







 
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                