2026-27ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை11 மணியளவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடரில், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன்மூலம் மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 9வது முறையாக தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெறுகிறார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கலாவதை ஒட்டி இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால நடைமுறையை மாற்றி, பட்ஜெட்டின் B பிரிவில் முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகரித்துவரும் தங்கம் விலையை கட்டுப்படுத்த திட்டங்கள், காப்பீடுகளுக்கு சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
