நவம்பர் 24 மகா தீப தினத்தன்று மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை..!

Estimated read time 0 min read

ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பார்க்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு படையெடுத்து வருகின்றனர். கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, பொதுமக்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

அண்ணாமலையார் மலையில் ஏறுவதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால் கடந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் வரும் 24ம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த சூழலில் திருவண்ணாமலையில் தீப தினத்தன்று மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் அறிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடர்வதால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், பக்தர்கள் தீப மலையின் மீது ஏறி மகா தீபத்தை தரிசிக்க தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author