மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஐப்பசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்!

Estimated read time 0 min read

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற ஐப்பசி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு பால், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, அன்னபூரணி அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் அம்மனை, பூசாரிகள் தாலாட்டுப் பாடல்களுடன் ஊஞ்சல் மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அம்மனை அமர வைத்து தாலாட்டுப் பாடல்கள் பாடி உற்சவம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author