பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்- 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

Estimated read time 1 min read

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் காங்கேயம் வடக்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

பாஜக மாவட்ட வடக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப் பிரியா சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், 200-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

You May Also Like

More From Author