நெல்லை ஆக 18
அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவையின் 51-ஆவது ஆண்டுவிழா
பேரவைத் தலைவர் புலவர் நீ.அய்யப்பன் தலைமையில் அம்பை வேல்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
துணைத்தலைவர் வெ.கண்ணன், ஓய்வு பெற்ற என்.சி.சி.ஆசிரியர் மூ.அணஞ்சி, சுத்தமல்லித் திருவள்ளுவர் கழகப் பொருளாளர் மா.கண்ணன், பேரா.சீ.லெட்சுமணன்,சேரை தமிழ்ப் பேரவைப் பொருளாளர் ச.பொன்னழகன், கயிலைமணி அன்னத்தாய், ச.பூங்குன்றன், சங்கு சபாபதி, பறவைகள் தொண்டு நிறுவன அமைப்பாளர் ச.பாலசுப்பிரமணியன், பா.வேலாயுதம், வை.சங்கரநாராயணன், ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயலாளர் சாலமன் ராஜ், கி.குமுதவல்லி நாச்சியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மு.விநாயகம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்.
பேரவைப் பொருளாளர் பாரதி கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
செயலர் ச.இலட்சுமணன் ஆண்டறிக்கை வாசித்தார்.
திருவருள் லத்தீப் இன்றைய சிந்தனை வழங்கினார்.
தென்காசித் திருவள்ளுவர் கழகத்தின் கருவூலர் வ.சந்திரசேகரன், வாமா அறக்கட்டளை நிறுவனர் மு.முத்துக்குமாரசாமி,கே.பி.பாலசுப்பிரமணியன், பாப்பாக்குடி இரா.செல்வமணி, பேரவைச் செயற்குழு உறுப்பினர் பு.அருமைராஜ் சோம.மகாலிங்கம் எம்.சி.ஏ.மார்ட்டின ச.சதாசிவம், அம்பைத் திருக்குறள் அறக்கட்டளை புன்னைவனநாறும்பூநாதன், கவிஞர் மீ.தமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புத்தனேரி கோ.செல்லப்பா சிறப்புரையாற்றினார்
அம்பை சிதம்பரநாடார் சன்ஸ் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்
இளங்கோ மற்றும் பாப்பாக்குடி அ.முருகன் ஆகியோர் மறைந்த நிர்வாகிகளுக்கு நினைவாஞ்சலி கவிதை வாசித்தனர்
சிறப்பு பட்டிமன்றங்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபற்றது
விழாவில் பாரதி கண்ணன் சிவசங்கர் கவிதா
வை சங்கரநாராயணன் ஆகியோர் உட்பட தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்டார்
நிறைவாக
ஐ.லட்சுமணன் நன்றி கூறினார்
