முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்: 70 வயது மேற்பட்டோருக்கு இலவச மருத்துவச் சிகிச்சை  

Estimated read time 1 min read

தமிழகத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் முதியோர்களுக்கு எவ்வித வருமான வரம்பும் இன்றி இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் ‘முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்’ தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 2026-27 நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சுகாதாரத்துறை சார்பில் 115 புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
அதில் முக்கிய அறிவிப்பான இத்திட்டம், 70 வயதைக் கடந்த தமிழக குடிமக்கள் அனைவருக்கும் பொருந்தும்.
முதியோர்களுக்கான மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், வருமான வரம்பு காரணமாக அரசு நிதியுதவி பெறும் திட்டங்களில் இருந்து தகுதியானவர்கள் விடுபடுவதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author