இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

Estimated read time 0 min read

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு வருகை தந்த வியட்நாம் அதிபர் டோ லாமை பிரதமர் மோடி வரவேற்றார்.

3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள வியட்நாம் அதிபர் டோ லாம், டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வியட்நாம் அதிபர் டோ லாமை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து, வியட்நாம் அதிபருக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் ராணுவ தலைமை அதிகாரிகளை அறிமுகப்படுத்தி வைத்தனர்

You May Also Like

More From Author