நாளை காலை முதலமைச்சராக பதவி ஏற்கிறார் விஜய்

Estimated read time 0 min read

நாளை காலை முதலமைச்சராக பதவி ஏற்கிறார் தவெக தலைவர் விஜய்.

காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் ஆதரவால் தவெக பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை விஜய் பெற்றதால் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரினார்.

பல போராட்டங்களுக்கு பின் விஜய் ஆட்சி அரியணையில் ஏறப்போவது உறுதியானதை அடுத்து பனையூர் தவெக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தவெக தொண்டர்கள் ஆட்டம், பாட்டத்துடன் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சராக பதவி ஏற்கிறார் தவெக தலைவர் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

You May Also Like

More From Author