அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை பெறுவதற்காக வெளிநாட்டினர் மேற்கொள்ளும் ‘பிரசவ சுற்றுலா’வுக்கு தடை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
பணக்காரர்கள் பணம் கொடுத்து அமெரிக்க குடியுரிமையை விலைக்கு வாங்குவதை தடுப்பதே இதன் நோக்கம் என்று ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.
பிரசவத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டு பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி தானாகவே குடியுரிமை வழங்கப்படாது.
மேலும், அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டு தூதரக ஊழியர்களின் குழந்தைகள், எதிரி நாடுகளை சேர்ந்தவர்களின் குழந்தைகள் ஆகியோருக்கும் பிறப்புரிமை குடியுரிமை மறுக்கப்படும்.
பிரசவ சுற்றுலாவுக்கு தடை: டொனால்ட் டிரம்ப் புதிய நிர்வாக உத்தரவில் கையெழுத்து
