தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து, அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
தொகுதி மறுவரையறை பணிகளால், தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்களுடனான கலந்தாய்வு கூட்டம், நாளை பிற்பகல் 3:00 மணிக்கு, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், முதல்வர் விஜய் தலைமையில் நடக்க உள்ளது.
இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ்கள், புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் வாயிலாக, தமிழகத்தை சேர்ந்த அனைத்து லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
