இந்திய விமானப்படையில் புதிய வரலாறு! ‘டாப் கன்’ தகுதியைப் பெற்ற முதல் பெண் போர் விமானி பாவனா காந்த்  

Estimated read time 1 min read

இந்திய விமானப்படையின் முன்னணிப் பெண் போர் விமானியான ஸ்குவாட்ரன் லீடர் பாவனா காந்த், குவாலியரில் உள்ள பிரசித்தி பெற்ற TACDE பயிற்சி மையத்தில் ‘ஃபைட்டர் காம்பாட் லீடர்’ (FCL) படிப்பை வெற்றிகரமாக முடித்து நாட்டின் முதல் பெண் ‘டாப் கன்’ (Top Gun) போர் விமானியாக வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்க கடற்படையின் உலகப் புகழ்பெற்ற ‘டாப் கன்’ பயிற்சி மையத்திற்கு இணையான இந்த 20 வாரக் கடுமையான பயிற்சியை முடித்ததன் மூலம், வான்வழி போர்த் தந்திரங்களை வகுக்கும் முன்னணி படைப்பிரிவுத் தலைவர்களில் ஒருவராக பாவனா காந்த் தற்போது உருவெடுத்துள்ளார்.

You May Also Like

More From Author