தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்த சில நிமிட இடைவெளியில் ஏற்பட்ட இரண்டு பயங்கர நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளன.
ரிக்டர் அளவுகோலில் 7.1 மற்றும் 7.5 ஆகப் பதிவான இந்த அசுர நிலநடுக்கங்களால் தலைநகர் கரகஸ் உட்பட பல பகுதிகளில் பிரம்மாண்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, கரீபியன் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
