வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிக்கான முன்னுரை மற்றும் சிஎம்ஜியின் கலை நிகழ்ச்சியை உலகம் கூட்டாக கண்டு களிப்பது எனும் சிறப்பு நடவடிக்கை, பிப்ரவரி 13ஆம் நாள், எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்றது. சீன ஊடகக் குழுமம், எகிப்துக்கான சீனத் தூதரகம், எகிப்து சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சகம், எகிப்து சுற்றுலா ஆணையம் ஆகியவை இந்நடவடிக்கையைக் கூட்டாக நடத்தின. இந்நிகழ்வில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைசியோங் காணொளி மூலம் உரை நிகழ்த்தினார். இரு நாடுகளின் அரசியல், கல்வி, மற்றும் ஊடகத் துறைகளைச் சேர்ந்த 200க்கும் மேலானோர் இதில் கலந்து கொண்டனர்.
ஷென் ஹைசியோங் கூறுகையில், தற்போது உலகளவில் சுமார் 20 நாடுகள் மற்றும் பிரதேசங்களில், வசந்த விழா கொண்டாடப்படுகின்றது என்றார். மேலும், வசந்த விழா கொண்டாட்டத்துக்கான சீன ஊடகக் குழுமத்தின் கலை நிகழ்ச்சிகள் 43 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன என்றார். நடப்பு ஆண்டில் சீன ஊடகக் குழுமம், “5G+4K/8K+AI” என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, 85 மொழிகளின் மூலம், உலகளாவிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான சீனக் கலாசார விருந்தை வழங்கும் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
