போ ஆவ் ஆசிய மன்றக்கூட்டத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டம் 28ஆம் நாள் முடிவடைந்தது. கடந்த 4 நாட்களில், 60க்கு மேலான நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 2000 பிரதிநிதிகள், மாறிவரும் உலக நிலைமையில் ஆசியாவின் எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்குவது என்ற தலைப்பில் விவாதித்தனர்.
நம்பிக்கையை அதிகரிப்பதோடு, ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது, திறப்பின் மூலம் பொருளாதார உலகமயமாக்கத்தை முன்னேற்றுவது, ஒன்றுக்கு ஒன்று நலன் தருவதோடு செழுமையான வளர்ச்சியை முன்னெடுப்பது, சமாதான சக வாழ்வில் அமைதியை பேணிக்காப்பது ஆகிய 4 முன்மொழிவுகளை சீனா முன்மொழிந்தது.
சீனா முன்வைத்த ஆசிய பொது எதிர்கால சமூகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் ஆசிய பொருளாதாரம், உலகின் பொருளாதாரத்தில் வகிக்கும் விகிதம் சீராக அதிகரித்து வருகின்றது.
உலகின் நிச்சயமற்றதன்மை அதிகரித்த போதிலும், உலக வளர்ச்சியின் உந்து சக்தியாக ஆசியா மாறும். ஆசியாவின் மிக பெரிய பொருளாதார நாடான சீனா, சொந்த நிலையான நிலைமையைக் கொண்டு, உலகின் அறைகூவல்களைச் சமாளித்து வருகின்றது.
திறப்பான சீனா, உலகிற்கு நிலைதன்மையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.