நாடாளுமன்றத்தில் ‘தேர்வு முறைக்கேடு தடுப்புத் திருத்தச் சட்ட மசோதா 2026’ மீது இன்று காரசார விவாதம்  

Estimated read time 1 min read

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் கடந்த ஒரு வாரமாகச் செயல்படாமல் முடங்கியிருந்த நாடாளுமன்றத்தில், சபாநாயகர் ஓம் பிர்லாவின் முயற்சியால் அமைதி திரும்பியுள்ளது.
இதையடுத்து, ‘பொதுத் தேர்வுகள் (நேர்மையற்ற முறைகளைத் தடுத்தல்) திருத்தச் சட்ட மசோதா, 2026’ மீது செவ்வாய்க்கிழமையன்று மக்களவையில் முதலாவது முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது.
காக்கரொச் ஜனதா கட்சி (CJP) நடத்திய போராட்டங்களின் போது மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி குறித்து அரசு விளக்கமளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் திங்கள்கிழமை அவையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

You May Also Like

More From Author