இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நுவரெலியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார்.
சீதையம்மன் ஆலயத்திற்கு சென்ற மத்திய அமைச்சரை, அறங்காவலர் சபைத் தலைவர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து சிறப்பு பூஜையில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அனுமான் பாதத்தையும் புனித கங்கையையும் தரிசனம் செய்தார்.
பின்னர் ஆலய நிர்வாகம் சார்பில் நினைவுச் சின்னம் வழங்கிய நிர்வாகிகள், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட புதிய வீடுகளின் பயனாளிகளை சந்தித்து, அவர்களுடன் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார்.
