மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குறித்து தவறான பிரச்சாரம் செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை வேட்பாளருமான சசி தரூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சைபர் காவல்துறை ஏப்ரல் 15 அன்று அதிகாரப்பூர்வமாக இந்த வழக்கைப் பதிவு செய்தது.
ஆனால் அதன் விவரங்கள் இன்று தான் தெரியவந்தது.
தொலைக்காட்சி விவாதத்தின் போது சந்திரசேகர் குறித்து சசி தரூர் தவறான தகவலை பரப்பியதாகக் கூறி பாரதிய ஜனதா கட்சி(பாஜக) தலைவர் ஜேஆர் பத்மகுமார் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சந்திரசேகர் குறித்து தரூர் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக பத்மகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக சந்திரசேகர் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கடலோரப் பகுதிகளில் உள்ள வாக்காளர்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்வதாக சசி தரூர் கூறியது பிரச்சனையாகி உள்ளது.