சீன நிறுவனச் சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டு சங்கம், 2025ஆம் ஆண்டு உலக எரியாற்றல் வளர்ச்சி முறை மாற்றம் பற்றிய அறிக்கையை, நவம்பர் 22ஆம் நாள் வெளியிட்டது.
தரவுகளின்படி, உலகளாவிய மிகப் பெரிய மற்றும் முழுமையான தூய்மை எரியாற்றல் உற்பத்தித் தொழில் சங்கிலியை சீனா உருவாக்கியுள்ளது.
இவ்வறிக்கையில், புதைபடிவ எரியாற்றல் பயன்பாடு, உலகளவில் கார்பன் வெளியேற்றத்தில் மிகப் பெரிய பகுதியாகும். 2024ஆம் ஆண்டு, எரியாற்றல் வளர்ச்சி முறை மாற்றத்துக்கான சீனாவின் முதலீட்டுத் தொகை 81 ஆயிரத்து 800 கோடி அமெரிக்க டாலரை எட்டி, 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 20 விழுக்காடு அதிகமாகும்.
இது, அமெரிக்கா, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மொத்த முதலீட்டுத் தொகையைத் தாண்டி, உலகத்தில் முதலிடத்தை வகித்துள்ளது.
மேலும், சீனாவின் காற்று ஆற்றல் மின்சார உற்பத்தி சாதனங்கள், ஒளிவோல்ட்டா மின்கலப் பொருட்கள், மின்னாற்றல் வாகனங்கள் முதலியவை 200க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
