2030க்குள் உலகப் போர் நடக்கும் என எலான் மஸ்க் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
ஹண்டர் ஆஷ் என்ற எக்ஸ் பயனர், அணு ஆயுதங்கள், வலிமை வாய்ந்த நாடுகளுக்கு இடையே போரை தடுப்பதால் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் செயலற்றுப் போயுள்ளன எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், தனது கணிப்புப்படி போர் நிச்சயம் நடக்கும் எனவும், இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் அது நடக்கும் என்றும் கூறினார்.
எனினும், தனது இந்த கருத்துகுறித்து எலான் மஸ்க் குறிப்பிட்டோ அல்லது விரிவாகவோ எதுவும் கூறவில்லை.
