தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு..!!மாஜி எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு.!

Estimated read time 0 min read

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு, வரும் அக்., 6ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், தவெக, திமுக, அதிமுக,நாதக என, நான்கு முனை போட்டி நிலவும் என தெரிகிறது.

திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளர்கள் தேர்வு தீவிரமாக நடைபெறுகிறது. தவெக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக, சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சி தலைவரான முதல்வர் விஜய், ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்த இரு முன்னாள் எம்எல்ஏக்களில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க, முடிவு செய்ததாக தெரிகிறது.

ஆனால், இருவருக்கும் வாய்ப்பு வழங்குமாறு, அவர்களை, அதிமுகவில் இருந்து தவெகவுக்கு அழைத்து வந்த அமைச்சர் ஒருவர் கூறியதால், தவெக வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், முதல்வர் விஜய் லண்டன் செல்கிறார்.

எனவே, வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும் பொறுப்பு, தவெக பொதுச்செயலரான அமைச்சர் ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் சற்றுமுன் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது தவெக.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல், இம்முறை தவெக சார்பில் களமிறங்குகிறார். அதோபோல் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சத்யபாமா, இம்முறை தவெக சார்பில் களமிறங்குகிறார்.

You May Also Like

More From Author