நவம்பர் 10, 11 தேதிகளில் கோலாகல கொண்டாட்டம்! கிரீஸுக்கு பறந்த ரஜினி மற்றும் ஸ்டாலின் குடும்பம்!

Estimated read time 1 min read

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவருக்கும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவருமான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

இதன்படி, நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கிரீஸ் நாட்டில் திருமண விழா நடைபெற இருக்கிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். விமானத்தில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

அதேபோல், மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் குடும்பத்தினருடன் கிரீஸ் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் துபாய் வழியாக கிரீஸ் சென்றதாகக் கூறப்படுகிறது. நவம்பர் 13-ம் தேதி அதிகாலை சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரீசில் திருமண விழா முடிந்ததைத் தொடர்ந்து, நவம்பர் 21-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author