2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  

தமிழகம்: மேற்கு வங்காளத்தை ஓட்டிய வடக்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 08:30 மணி முதல் நிலவுகிறது.

அதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜூலை 26 மற்றும் ஜூலை 27
தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

You May Also Like

More From Author