புதிய தொழில்நுட்பங்கள் மூலம் 3 தீய சக்திகளின்  ஊடுருவலைத் தடுக்க வேண்டும்: சீனா

புதிய தொழில்நுட்பங்கள் மீதான பயனுள்ள கட்டுப்பாட்டை வலுப்படுத்தி தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகிய மூன்று தீய சக்திகள் அவற்றைப் பயன்படுத்தி ஊடுருவுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீனப் பிரதிநிதிக் குழுவின் தற்காலிக நிர்வாகி சுன்லேய் 5ஆம் நாள் பயங்கரவாதத் தடுப்புப் பிரச்சினைக்கான பாதுகாப்பவையின் கூட்டத்தில் உரைநிகழ்த்திய போது தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாத அமைப்புகள் இணையம், செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா விமானம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பரப்புரை செய்தல், நிதித் திரட்டுதல், தாக்குதல் நடத்துதல் ஆகியவற்றை மேற்கொண்டு பயங்கரவாதத் தடுப்பில் புதிய அறைகூவலை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலைமையைச் சமாளிக்க, ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் இணைந்து புதிய தொழில்நுட்பங்கள் மீதான கட்டுபாட்டை வலுப்படுத்தி இடர்ப்பாட்டு மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு முறையை மேம்படுத்துவதற்குச் சீனா ஆதரவளிப்பதாக என்றார்.

 

You May Also Like

More From Author