திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு இந்த ஆண்டு நவம்பர் 7 அன்று நடைபெற உள்ளது.
இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது பின்வருமாறு:- 07/11/2024 சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 06/11/2024 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொது மக்கள் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அன்று திருச்செந்தூருக்கு சென்று தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதன்படி வருகின்ற 07/11/2024 சூரசம்ஹாரம் வருவதால் திருச்செந்தூருக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.