அந்தமான் கடலில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) நண்பகல் வேளையில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் தேசிய நில அதிர்வு மையம் (NCS) அறிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு சரியாகப் பிற்பகல் 12:06 மணிக்கு 90 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இதுவரை எந்தவிதமான உயிர்ச் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் அதிக நிலநடுக்க ஆபத்து நிறைந்த மண்டலமான V-இல் அமைந்துள்ளன.
இந்திய-ஆஸ்திரேலியன் தட்டு மற்றும் பர்மா தட்டு ஆகியவற்றின் குவிதல் எல்லையில் (Convergent Boundary) அமைந்துள்ளதன் காரணமாக, இந்த பிராந்தியத்தில் மிதமான மற்றும் வலுவான நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவது வழக்கம்.
அந்தமான் கடலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆகப் பதிவு
