ஐடி ஊழியர் என நம்ப வைத்து இளம் பெண்ணிடம் 16 சவரன் நகை அபேஸ் செய்த இன்ஸ்டா பிரபலம்..!!

Estimated read time 1 min read

இன்ஸ்டாகிராமில் IT ஊழியர் என இளம் பெண்ணுக்கு திருமண ஆசைக்காட்டி ரூ.1 |லட்சம் பணம் மற்றும் 16 சவரன் தங்க நகையை மோசடி செய்த கௌஷிக் (24) என்பவர் கைது.

3 சவரன் தங்க நகையை விற்று கௌஷிக் வாங்கிய விலை உயர்ந்த இருசக்கர வாகனம் மற்றும் 9 சவரன் நகைகள் மீட்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் கௌஷிக் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னை ஒரு ஐடி (IT) ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட கௌஷிக், அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நம்ப வைத்துள்ளார்.

அப்பெண்ணிடமிருந்து, கௌஷிக் பல்வேறு காரணங்களைக் கூறி சுமார் ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 16 சவரன் தங்க நகைகளைப் பெற்று மோசடி செய்துள்ளார். ஆனால், அதன் பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் அவர் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கௌஷிக் மோசடியில் ஈடுபட்டது உறுதியானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கௌஷிக்கிடமிருந்து 9 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மோசடி செய்த நகைகளில் 3 சவரன் தங்க நகையை விற்று அவர் வாங்கிய விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். மீதமுள்ள நகைகள் மற்றும் பணம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author