2026-ல் முதலீட்டாளர்களை அதிர வைத்த வீழ்ச்சி…!!” 

Estimated read time 1 min read

2026-ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தங்களின் உச்சத்திலிருந்து எதிர்பாராத வகையில் மிகக் குறைந்த நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளன. 10 கிராம் தங்கம் ₹2 லட்சம் வரை உயரும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் ₹1.25 லட்சமாகவும், ஒரு கிலோ வெள்ளி ₹4.25 லட்சத்திலிருந்து ₹1.75 லட்சத்திற்கும் கீழாகவும் சரிந்துள்ளன.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விலை வீழ்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இறக்குமதி வரி கொள்கைகள் மற்றும் ஈரானுடனான மோதல் முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்தது; மேலும் போர்ச் செலவுகளுக்காக அமெரிக்க அரசு அதிகக் கடன் வாங்கியதால், முதலீட்டாளர்களை ஈர்க்க அமெரிக்கப் பத்திரங்களின் வட்டி விகிதம் 5 சதவீதத்தைத் தாண்டியது.

Please follow and like us:

You May Also Like

More From Author