திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விவரம்

Estimated read time 1 min read

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இருப்பினும், ஒருமுறை நடவடிக்கையாக நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளது.

* இந்த அனுமதி தற்காலிகமானது; வழக்கின் தகுதி அடிப்படையிலான இறுதி முடிவாகக் கருதக்கூடாது.

* அந்தக் கல் தூண் பாரம்பரிய மத வழிபாட்டுக்கான இடம் என்று நீதிமன்றம் எந்த முடிவுக்கும் வரவில்லை.

* அங்கு தீபம் ஏற்றுவது அத்தியாவசிய மத நடைமுறையா அல்லது அதற்கு யாருக்கேனும் சட்டப்பூர்வ உரிமை உள்ளதா என்பதையும் இந்த உத்தரவு தீர்மானிக்கவில்லை.

* கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்றச் செல்லலாம். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

* பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், தேவைப்பட்டால் CISF படையினரைப் பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author