“விஜய் முதலில் பேச வேண்டும்; தவெகவினருக்கு வகுப்பெடுக்க வேண்டும்”- அண்ணாமலை

Estimated read time 0 min read

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பரில் கிலோ 58 ரூபாய்க்கு விற்ற அரிசி தற்போது 81 ரூபாய்க்கு விற்பனையாவதாக வீ த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 31 லாக் அப் மரணங்கள் நடந்தன. தவெக ஆட்சியில் 6 மாதத்தில் 9 லாக் அப் மரணங்கள் நடந்துள்ளன. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசைப் போலவே தவெக அரசும் பொய் சொல்லி இருக்கிறது. தேனியில் தவெக எம். எல். ஏ ஜெகன்னாத் மிஸ்ரா சாலையில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தினார். சோத்துப்பாறை அணையை தவெக மாவட்ட நிர்வாகி தலைமையிலாக குழு திறந்துவிட்டு ரீலஸ் பதிவிட்டனர். அரசுக்கு மீறி தாங்கள் இல்லை என்பதை தவெகவினர் உணரவேண்டும். அவர்களுக்கு விஜய் வகுப்பெடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சமணத் துறவிகள் விளக்கேற்ற வைக்கப்பட்ட தூண் என்றனர். தீப விவகாரத்தில் திமுக, தவெக அரசுகளுக்கு வித்தியாசம் இல்லை.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பரில் கிலோ 58 ரூபாய்க்கு விற்ற அரிசி தற்போது 81 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மாற்றம் வேண்டும் என்று ஒரு கோடி பேர் வாக்களித்தனர். அதனை விஜய் பார்க்க வேண்டாமா? முதல்வருக்கு முக்கியமானது பேசுவது. முதல்வர் விஜய் முதலில் பேச வேண்டும். எந்த பிரச்னையிலும் முதல்வர் விஜய் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்றால் எப்படி?” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author