சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹெ யோங்சியான் 19ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளார் சந்திப்பில், பாரிஸில் நடைபெற்ற சீனா-அமெரிக்கா பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், இருதரப்புகள் இருநாட்டு அரசு தலைவர்களின் முக்கிய ஒருமித்த கருத்துக்களை வழிகாட்டலாக கொண்டு, சுங்கவரி உள்ளிட்ட பொது அக்கறை கொண்ட பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள் குறித்து கலந்தாய்வுகளை மேற்கொண்டு, புதிய ஒத்த கருத்துக்களை எட்டியதோடு, தொடர்ந்து கலந்தாய்வுகளை மேற்கொள்ள ஒப்புகொண்டுள்ளன என்றார். சீனா-அமெரிக்கா பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வு இயங்குமுறையை தொடர்ந்து சிறப்பாக பயன்படுத்தி, பேச்சுவார்த்தையை வலுப்படுத்தவும், நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தவும், இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் நிலையான மற்றும் சீரான வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இருதரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
சீனா-அமெரிக்கா பொருளாதார கலந்தாய்வு இயங்குமுறையை சிறப்பாக பயன்படுத்த வேண்டும்
You May Also Like
More From Author
தேசிய நெடுஞ்சாலைகளில் QR கோட் பலகைகளை நிறுவும் NHAI
October 6, 2025
புரோட்டின் லட்டு செய்வது எப்படி?
January 31, 2024
