ஊத்துப்பட்டியில்
கோள்கள் திருவிழாவில் டெலஸ்கோப் பயிற்சி பெற்ற மாணவர்கள்

மாவட்ட இடைநிலை கல்விஅலுவலர் பங்கேற்பு

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி,கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப், சார்பில் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த கோள்கள் திருவிழாவில் தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் 2024 இடங்களில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை
பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி கோள்கள் திருவிழாவை நடத்தி வருகிறது.


ஊத்துப்பட்டி பள்ளியில் நடந்த கோள்கள் திருவிழாவில் மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட டெலஸ்கோப் மூலம் தொலைதூரப் பொருட்களை பார்வையிட பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி தலைமை வகித்தார்.


தலைமையாசிரியர் ராஜமாணிக்கம்,கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர்முத்து முருகன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சூரிய பிரம்மன் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன் கலந்து கொண்டு டெலஸ்கோப் பயிற்சியை துவக்கி வைத்தார்.

இதில் அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார்,ஆசிரியர்கள் பாலகணேசன்,மணி, உள்பட மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் கீதா சக்திவேல் நன்றி கூறினார்.

You May Also Like

More From Author