டெல்லி அரசியலிலும் தடம் பதிக்கும் தவெக! மாநிலங்களவை முதல் எம்.பி. யார்? விஜய் தீவிர ஆலோசனை!  

Estimated read time 0 min read

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், தற்போது டெல்லி நாடாளுமன்ற அரசியலிலும் தனது முதல் தடம் பதிப்பிற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள்ளது.
அதிமுகவின் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததால் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குத் தவெக சார்பில் யாரை நிறுத்துவது என்பது குறித்து முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விரைவில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் தவெக சார்பில் யாரைக் களமிறக்குவது என்பது குறித்தும் அக்கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது.

You May Also Like

More From Author