சீன ஊடகக் குழுமமும், சீனப் பண்பாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகமும் கூட்டாக தயாரித்த “இணக்கமான அழகான பாடல்” என்னும் சிறப்பு நிகழ்ச்சி டிசம்பர் 7ஆம் நாள் ஒளிப்பரப்பட்டது.
சீன மற்றும் வெளிநாடுகளின் புகழ்பெற்ற பாடல்கள் இந்நிகழ்ச்சியில் பாடப்பட்டுள்ளன. சீன இசையை உலக இசையுடன் ஒன்றிணைப்பது, நாகரிகங்களுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் பகிர்வை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், சீனா, பல்வேறு நாடுகளுடன் பல்வகை நாகரிகங்களுக்கிடையிலான பரிமாற்றத்தை முன்னேற்றி, மனித குலத்தின் வளர்ச்சிச் சாதனைகளைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்வதற்கான கதைகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன.
பரிமாற்றம் மற்றும் பகிர்வு, மனித குலத்தின் நாகரிக முன்னேற்றத்தின் இயக்காற்றலாகும். நாகரிகங்களின் பரிமாற்றம் மற்றும் பகிர்வின் மூலம், நாகரிகங்களுக்கிடையிலான மோதல்களைத் தீர்க்கும் நல்ல மாதிரியாக இந்நிகழ்ச்சி திகழ்கிறது.