சமீபகாலமாக விமான விபத்துகள் என்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு விமான விபத்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் ஒரு பயங்கர விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி வீடுகள் மீது விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டு தீபற்றி எரிந்தது.
இந்த விமானத்தில் இருந்த இருவரும் உயிரிழந்த நிலையில் மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் என்பது நடைபெறுகிறது. மேலும் வாஷிங்டனில் சமீபத்தில் நடுவானில் ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் விமானம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு 67 பேர் இறந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.