9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹார்பின் நகரில் துவங்கவுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களும், ஒளிபரப்பு செய்யும் நிறுவனங்களும் வேலை செய்யும் முக்கிய இடமான ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியின் முக்கிய செய்தி ஊடக மையம் ஜனவரி 31ஆம் நாள் இயங்கத் துவங்கியது.
இம்மையத்தில், முக்கியச் செய்தி மையமும், சர்வதேச ஒளிபரப்பு மையமும் அடங்கும். இவை, செய்தியாளர்களுக்கும் ஒளிபரப்பு செய்யும் நிறுவனங்களுக்கும் சேவை புரியும்.
முக்கியச் செய்தி மையத்தில், ஒட்டுமொத்த சேவைப் பகுதி, செய்தியாளர் பணி புரியும் பொது இடம், ஒளிபரப்பு மையம், செய்தியாளர் கூட்ட மாளிகை, பேட்டியளிக்கும் பகுதி ஆகியவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.