சீனத் தேசிய இரயில் குழுமத்தின் தகவலின்படி, ஜனவரி 31ம் நாள் நாடளவில் ரயில் மூலம் 118 இலட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டது.
இந்நிலையில் பயணிகளின் வசதிக்காகக் கூடுதலாக 545 பயணியர் ரயில் வண்டிகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனவரி 30ஆம் நாள் நாடளவில் ரயில் மூலம் 96.76 இலட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரயில் போக்குவரத்து பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் உள்ளது.
வசந்த கால பயணப் போக்குவரத்து தொடக்கம் முதல் ஜனவரி 30ம் நாள் வரை, தேசிய ரயில் மூலம், 20.6 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.