வந்தவாசியில் தமிழ்ச் சங்கம் சார்பில் பாரதி கண்ட பாரதம் உரையரங்கம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா ஆசியன் இன்ஸ்டிடியூடில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு வந்தை வட்ட கோட்டை தமிழ் சங்கத் தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை தாங்கினார். சங்க செயலாளர் இரா.பாஸ்கரன், துணைத் தலைவர் எ.தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பா.சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, தெள்ளாறு புலவர் ந.பானு பங்கேற்று, ‘பாரதி கண்ட பாரதம்’ என்ற தலைப்பில் பாரதியின் பல்வேறு கருத்துக்களை சிறப்புரையாற்றினார். மேலும் பாரதியார் குறித்த கவிதைகள் வாசித்த மாணவியர்களுக்கும், ஓவியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ்ச் சங்க துணை செயலாளர் ஜா.தமீம், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கவிஞர் மா.கதிரொளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் பொருளாளர் சீ.கேசவராஜ் நன்றி கூறினார்.