மதுரை காந்தி மியூசியத்திலிருந்து சங்கரன்கோவிலில் உள்ள புத்தர் கோவில் வரை நடைபெற்ற அமைதிக்கான நடை பயணத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த புத்த பிக்குகள் பங்கேற்றனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைந்துள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள், மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து புத்த மத வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் அமைதிக்கான நடை பயணமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் சென்றனர். அங்கே புதிதாக 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட புத்த கோயிலுக்கு சென்று வழிபட உள்ளனர்.