எதிர்காலத்தில் எல்லை நுழைவு கொள்கையை சீனா மேம்படுத்தி, விசா விலக்கு நாடுகளின் அளவைத் தொடர்ந்து விரிவாக்கும்.
இவற்றின் மூலம், நம்பத்தக்க அழகான சீனாவை வெளிநாட்டு நண்பர்கள் கண்டு ரசிக்கலாம் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியா குன் பிப்ரவரி 12ம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மனித தொடர்புக்கு வசதியளிக்கும் 110க்கும் மேலான நடவடிக்கைகள், 38 நாடுகளுக்கு விசா விலக்கு கொள்கை, சீனாவைக் கடந்து பிற நாடுகள் அல்லது பிரதேசங்களுக்குச் செல்வதற்கான 240 மணி நேர விசா விலக்கு கொள்கை ஆகியவை, வெளிநாட்டுத் திறப்பில் சீனாவின் மனவுறுதியை வெளிக்காட்டுகின்றன.
இவை, திறப்புடன் கூடிய உலக பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக சீனா மேற்கொண்ட நடைமுறை செயல்பாடும் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
படம்:CFP