வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் சட்ட மசோதா இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது
கட்டாய கடன் வசூலித்தால் சிறை தண்டனை வழங்கும் சட்ட முன்வடிவை தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும் தமிழ்நாடு பணக்கடன்கள் வழங்குபவர்கள் சட்டத்தை திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமுன்வடிவை தாக்கல் செய்திருந்தார். அதன்படி, இனி எந்த நிதி நிறுவனமாவது ஏழை மக்களிடம் கட்டாய கடன் வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும், கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் கொண்டுவந்த இந்த மசோதா பேரவையில் விவாதம் செய்யப்பட்டு கம்யூனிஸ்ட் காங்கிரஸ் தவாக ஆகிய கட்சிகள் ஆதரவுடன் நிறைவேறியது.