இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு இதுவே காரணம் : அக்சர் படேல் வருத்தம்
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக அங்கிரிஸ் ரகுவன்ஷி 44 ரன்களையும், ரிங்கு சிங் 36 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டுமே குவித்ததால் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணி சார்பாக டூப்ளிசிஸ் 62 ரன்களையும், அக்சர் பட்டேல் 43 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான சுனில் நரேன் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் கூறுகையில் : நாங்கள் முதலில் பந்துவீசுகையில் பவர் பிளே ஓவரின் போது மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தோம். ஆனால் இறுதியில் 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக வழங்கி விட்டதாக நினைக்கிறேன். அதேபோன்று பேட்டிங்கிலும் இரண்டு மூன்று விக்கெட்டுகளை எளிதாக விட்டுக் கொடுத்து விட்டோம்.
ஒருவேளை நாங்கள் அந்த இரண்டு மூன்று விக்கெட்டுகளில் ஒரு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தால் வெற்றியை நோக்கி நகர்ந்து இருக்க முடியும். இருந்தாலும் இறுதி நேரத்தில் விப்ராஜ் களத்தில் இருக்கும்போது வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. அவருடன் அஷுதோஷ் சர்மாவும் இருந்திருந்தால் முதல் போட்டியில் நாங்கள் எவ்வாறு வெற்றி பெற்றோமோ அதே போன்று வெற்றியை பெற்றிருக்க முடியும்.
இதையும் படிங்க : அந்தளவுக்கு நான் நல்ல ஃபீல்டர் கிடையாது.. அவரோட நம்பிக்கைகாக கடினமாக உழைக்கனும்.. ஆட்டநாயகன் நரைன் பேட்டி
ஆனால் அவரது விக்கெட்டை இழந்தது தான் இந்த போட்டியின் அருகில் வந்து நாங்கள் தோற்க காரணம். நான் பீல்டிங் செய்யும்போது பிராக்டிஸ் கிரவுண்டில் டைவ் அடித்ததால் காயம் ஏற்பட்டது ஆனால் அடுத்த போட்டிக்கு மூன்று நான்கு நாட்கள் இடைவெளி உள்ளதால் அதற்குள் நான் மீண்டு வந்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக அக்சர் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.
The post கொல்கத்தா அணிக்கெதிராக நாங்க இவ்ளோ கிட்ட வந்த தோக்க இதுதான் காரணம் – அக்சர் படேல் வருத்தம் appeared first on Cric Tamil.